கனடா வாத்துகளின் ஒரு பெருந்தொகை பூங்காக்களுக்குச் சேதம் விளைவிக்கலாம்,அவற்றின் கழிவுகள் சுகாதாரமற்ற நிலைமைகளை உருவாக்கி இயற்கை நீர்வழிகளையும் குளங்களையும் நீச்சல் தடாகங்களையும் மாசுபடுத்தலாம்.

  • கூடுகளை நெருங்க வேண்டாம். வாத்துகள் தங்களது கூடுகளை தீவிரமாக பாதுகாக்கும், அவற்றின் அலகுகளாலும் சிறகுகளாலும் காயமேற்படுத்தும்.
  • எச்சரிக்கைச் சைகைகளைக் கவனியுங்கள். வாத்துகள் வலிந்த தாக்குதலின் அடையாளமாகத் தலையை மேலும் கீழும் ஆட்டும், அச்சுறுத்தும் வகையில் உரக்கக் கத்தும்.
  • அமைதியாய் இருங்கள். நீங்கள் வலிந்து தாக்கும் ஒரு வாத்தை எதிர்கொள்ள நேர்ந்தால், அமைதியாக இருந்து, நேராக நின்று, கண் தொடர்பை கவனித்து மெதுவாகப் பின்வாங்குவது நல்லது. அச்சுறுத்தும்அசைவுகளை அல்லது ஒலிகளைச் செய்யாதீர்கள், பின்னால் திரும்பி ஓடுவதைத் தவிருங்கள்.
  • ஒரு வாத்து உங்களைக் காயப்படுத்தும் சாத்தியமில்லாத போதிலும் அவ்வாறு நடந்தால், உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
  • வாத்துகளுக்கு ஒருபோதும் உணவளிக்க வேண்டாம். மேலதிகத் தீன் கொடுப்பதால் அவற்றின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு அவற்றுக்கு மனிதர்கள் மீதுள்ள பயமும் குறைந்து விடும். அது பூங்காக்களும் விளையாட்டு மைதானங்களும் போன்ற அதிக போக்குவரத்துள்ள பகுதிகளில் அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் செய்கிறது.
Complementary Content
${loading}