எலிகளையும் வேறு தேவையற்ற விலங்குகளையும் தவிர்க்க இந்த வழிகாட்டல்களைப் பின்பற்றுங்கள்.

  • எந்த உணவையும் வெளியே விடாதீர்கள், உங்கள் குப்பைகளை முன்னதாகவே வெளியில் வைக்காதீர்கள்.
  • விலங்குகள் உள்ளடக்கங்களை உண்பதைத் தடுக்க உலோகக் குப்பைத் தொட்டிகளில் பாதுகாப்பாக பொருத்தப்பட்ட மூடியுடன் வெளிப்புறக் குப்பைப் பைகளை வைத்திருங்கள்.
  • வீட்டைச் சுற்றித் துப்புரவாக்குங்கள் - குறைவான குப்பைகள் என்றால் மறைவதற்குக் குறைவான இடங்களே இருக்கும்.
  • செல்லப்பிராணி உணவையும் பறவை விதைக் குப்பைகளையும் துப்புரவாக்குங்கள்.
  • தோட்டங்களைக் குப்பைகள் இல்லாமல் வைத்திருங்கள், தேவையற்ற குப்பைகள் சேர்வதைக் குறையுங்கள்.
  • உங்களிடம் கூட்டுப் பசளைக் குவியல் இருந்தால்,சேதன உணவுக் கழிவுகளைச் சேர்க்க வேண்டாம், ஏனெனில் அது எலிகளையும் விலங்குகளையும் ஈர்க்கக்கூடும்.
    Complementary Content
    ${loading}