மார்க்ஹம் வனவிலங்குகள்
விலங்குகளுடன் இணைந்து வாழ்வதற்கான உதவிக் குறிப்புகள்
மார்க்ஹமில் மனிதர்கள் மட்டும் வாழ்வதில்லை. நரிகளையும் கொயோட்டுகளையும் எலிகளையும் பிற வனவிலங்குகளையும் அவ்வப்போது காண முடியும். குடியிருப்பாளர்கள் நமது அண்டை வனவிலங்குகளுடன் அமைதியான சகவாழ்வை உறுதிப்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை எடுக்கலாம்.
- நரிகளும் கொயோட்டுகளும்
ஒன்ராறியோ முழுவதும் உள்ள கிராமப் பகுதிகளிலும் நகர்ப்புறப் பகுதிகளில் காணப்படும் நரிகளும் கொயோட்டுகளும் தகவமையக்கூடிய அறிவார்ந்த விலங்குகளாகும். அவை பெரும்பாலும் பள்ளத்தாக்கு அமைப்புகளுக்கும் பெரிய புல்வெளிகளுக்கும் பெரிய பூங்காக்களுக்கும் அருகில் காணப்படுகின்றன; சிறிய முலையூட்டிகள் அவற்றின் உணவில் முக்கிய கூறாகும்.
நமது பகிர்வான உள்ளூர்ச் சூழல் தொகுதிகளில் நரிகளும் கொயோட்டுகளும் ஒரு முக்கிய பகுதியாகும். அவற்றின் நடத்தையைப் புரிந்துகொள்வதன் மூலம், நாம் அமைதியாக இணைந்து வாழ கற்றுக் கொள்வதோடு நமது அண்டைவாழ் வன விலங்குகளுக்கு ஆழமான நம்பிக்கையையும் ஏற்படுத்தலாம். பொதுவாக, நரிகளும் கொயோட்டுகளும் மனிதர்களுடன் தொடர்பைப் பேண விரும்புவதில்லை. ஆனால் எப்போதாவது, அவை அவற்றின் வசதிக்காக மனிதர்களிடம் நெருங்கி வரலாம் என்பதை நாம் புரிந்து கொள்கிறோம்.
இந்த விலங்குகளுக்கு எதிர்ப்படுதலைத் தவிர்த்துக் கொள்ள - ஆனால், மிக முக்கியமாக, அவற்றை வனத்திலேயே வைத்திருக்க மனித உணவு ஆதாரங்களைக் கட்டுப்படுத்துவது சாலச் சிறந்த வழியாகும்:
- விலங்குகளுக்கு உணவை வெளியே போடாதீர்கள்.
- கழிவுகளைப் பாதுகாப்பான தொட்டிகளில் வைத்திருங்கள் அல்லது தொட்டிகளைப் பாதுகாப்பான கட்டிடத்தில் அல்லது கொள்கலனில் வைத்திருங்கள்.
- காலையில் குப்பைகளை எடுக்கும் வரை குப்பைத் தொட்டிகளை வெளியே வைக்க வேண்டாம்.க
- வெளியில் வைக்கப்படும் உரக் கொள்கலன்கள் வனவிலங்குகளால் சேதமாக்கப்பட இயலாமல் இருப்பதை உறுதி செய்யுங்கள்.
- மரங்களிலிருந்து விழுந்த பழங்களையும் பறவைகள் போடும் சிதறிய விதைகளையும் உணவூட்டிகளில் இருந்து அகற்றுங்கள்.
- செல்லப்பிராணிக்கான உணவை உள்ளே வைத்திருங்கள், சிறிய செல்லப்பிராணிகளைக் கவனிப்பாரின்றி வெளியில் விடாதீர்கள்.
ஒரு கொயோட்டு உங்களுக்கு எதிர்ப்பட்டு அது உடனடியாக ஓடிவிடாததாக இருந்தால், நீங்கள் பின்வருவனவற்றைச் செய்யலாம்:
- ஓசையெழுப்புங்கள், கத்துங்கள், கைகளைத் தட்டுங்கள், காலால் தட்டுங்கள், கைகளை அசையுங்கள்.
- விலங்கை நெருங்கிச் செல்ல வேண்டாம்.
- நீங்கள் அறியப்பட்ட அவற்றின் வாழிடங்களில் நடந்து செல்வதாக இருந்தால் ஒரு ஊது குழலை அல்லது ஒலி எழுப்பும் கருவியை எடுத்துச் செல்லுங்கள்.
நீங்கள் விலங்கு நோய்வாய்ப்பட்டிருப்பதையோ காயமடைந்திருப்பதையோ பார்த்தால், 905.415.7531 ஐ அழைத்து எங்கள் வனவிலங்குச் சேவை வழங்குநருக்குத் தெரிவியுங்கள். நெடிய உரோமம் நிறைந்த கொண்ட உங்கள் குடும்ப உறுப்பினர்களைப் பாதுகாப்பதும் முக்கியம். உங்கள் பூனைகளையோ சிறிய நாய்களையோ வீட்டுக்குள் வைத்திருங்கள் அல்லது வெளியே இருக்கும் போது மேற்பார்வை செய்யுங்கள். உங்கள் நாய்களை ஒரு தோல் வாருடன் நடக்க அழைத்து செல்லுங்கள், அவற்றை வெளியில் கவனிக்காமல் விட்டுவிடாதீர்கள்.
கொயோட்டுகளை ஏன் இடமாற்றம் செய்ய முடியாது?
ஒன்ராறியோவின் மீன், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒரு கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள கொயோட்டுகளைப் பிடித்து இடமாற்றம் செய்ய அனுமதி இல்லை. நகர்ப்புறங்களில் இருந்து வந்த வனவிலங்குகள் பொதுவாக தங்கள் இருப்பிடத்துக்குத் திரும்பி விடுகின்றன அல்லது வேறு இடங்களில் பிரச்சினையாக மாறிவிடுகின்றன என்று ஆராய்ச்சி காட்டுகிறது. மேலும், கொயோட்டுகள் வேட்டையாடப்படும் போது அல்லது கொடிய முறையில் அழிக்கப்படும் போது, மீதமுள்ளவை பெரிய அளவிலான குப்பைகளை உருவாக்கி அவற்றின் நில வரம்பை விரிவாக்கி மூலம் ஈடு செய்து கொள்கின்றன. விலங்குக் கட்டுப்பாட்டு முகவரகங்கள் கொயோட்டுகளைப் பிடிக்க முயலும் போது அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே ஒரு கொயோட்டு வழமைக்கு மாறான / முரட்டுத்தனமான நடத்தை அல்லது கடுமையான அதிர்ச்சியை அல்லது நோயை வெளிப்படுத்துகிறது.
- இரக்கூன்கள்
இரக்கூன்கள் உங்கள் இடத்தில் கூடு கட்டுவதைத் தடுப்பதற்கான சில எளிய தந்திரங்கள்:
- எந்த வகையான உணவையும் வெளியில் விட்டு விடாதீர்கள்.
- உங்கள் குப்பைகளை முற்கூட்டியே வெளியில் போடாதீர்கள், அது எப்போதும் பாதுகாப்பாக மூடப்பட்டிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
- எல்லா மாடியடிகளும் முகப்புத் தகடுகளும் பாதுகாப்பாகவும் விலங்குகள் புகக் கூடிய துளைகளோ இடைவெளிகளோ இன்றியும்இருப்பதை உறுதி செய்யுங்கள்.
- விலங்குகள் உள்ளே நுழையாதவாறு வெளிப்புறக் குழாய்களும் உலர்த்தித் துவாரங்களும் (வலைக் கம்பியால்) மூடப்பட்டிருப்பதைத் சரிபார்த்து உறுதி செய்யுங்கள்.
- பறவைத் தீனிகளில் இருந்து தரையில் விழும் மேலதிக விதைகளையும் மேலோடுகளையும் வழமையாகத் துப்புரவாக்குங்கள்.
- உங்களது செல்லப்பிராணிகளான கொறித்துண்பவை நாய் மலத்தைக் கிளறலாம் என்பதால் அதனை அகற்றிவிடுங்கள்.
- ஆமைகள்
நன்னீர் ஆமைகள் பாம்புகளையும் பல்லிகளையும் போன்ற ஊர்வனவாகும். கனடாவில் எட்டு பூர்விக நன்னீர் ஆமை இனங்கள் வாழ்கின்றன. அவை யாவும், அல்லது அவற்றின் ஒரு சனத்தொகையை அல்லது கிளையினத்தைக் கொண்டவை, தற்போது இடர்ப்பாட்டில் உள்ளன. ஒரு ஆமையின் ஓடு முக்கியமாக இரை கௌவிகளிடமிருந்து பாதுகாக்கப் பயன்படுகிறது. எல்லா ஆமைகளுக்கும் தமது வாழ்க்கைச் சுற்றை நிறைவு செய்ய நீர், நிலம் ஆகிய இரண்டையும் அணுகத் தேவைப்படுகிறது, அவை மார்க்கத்தில் உட்பட பல்வேறு ஈரநிலங்கள் முதல் ஏரிகள், ஓடைகள், ஆறுகள் வரை பல்வேறு நன்னீர் வாழிடங்ளில் வசிக்கின்றன.
ஆமைகளைப் பற்றிய மற்ற உண்மைகள்:
- ஒன்ராறியோவுக்கேயுரிய 8 வெவ்வேறு ஆமை வகைகள் உள்ளன, அவற்றில் பெரும்பாலானவை இடர்ப்பாட்டில் உள்ளன!
- சில ஆமைகள் 70+ வருடங்களுக்கு மேல் வாழக்கூடியவை என்பது உங்களுக்குத் தெரியுமா?
- மார்க்ஹமில் உள்ள பொது நிலங்களிலிருந்து, ஆமைகள் உட்பட எந்த வகையான வனவிலங்கையும் அகற்றுவது சட்டவிரோதமானது
- ஆமைகளுக்குத் தீங்கு விளைவிப்பது சட்டவிரோதமானது
- உங்கள் வளர்ப்பு ஆமையைக் காட்டுக்குள் விடாதீர்கள், உதவிக்காக ஆமை பாதுகாப்பு நிலையத்தைத் தொடர்பு கொள்ளுங்கள்
ஒந்தாரியோவிலுள்ள ஆமைகளைப் பற்றி மேலும் தகவல்களுக்காக, https://www.hww.ca/en/wildlife/fish-amphibians-and-reptiles/freshwater-turtles.html இற்குச் செல்லுங்கள்
- உங்கள் நிலத்தில் வாத்துகளா?
கனடா வாத்துகளின் ஒரு பெருந்தொகை பூங்காக்களுக்குச் சேதம் விளைவிக்கலாம்,அவற்றின் கழிவுகள் சுகாதாரமற்ற நிலைமைகளை உருவாக்கி இயற்கை நீர்வழிகளையும் குளங்களையும் நீச்சல் தடாகங்களையும் மாசுபடுத்தலாம்.
- கூடுகளை நெருங்க வேண்டாம். வாத்துகள் தங்களது கூடுகளை தீவிரமாக பாதுகாக்கும், அவற்றின் அலகுகளாலும் சிறகுகளாலும் காயமேற்படுத்தும்.
- எச்சரிக்கைச் சைகைகளைக் கவனியுங்கள். வாத்துகள் வலிந்த தாக்குதலின் அடையாளமாகத் தலையை மேலும் கீழும் ஆட்டும், அச்சுறுத்தும் வகையில் உரக்கக் கத்தும்.
- அமைதியாய் இருங்கள். நீங்கள் வலிந்து தாக்கும் ஒரு வாத்தை எதிர்கொள்ள நேர்ந்தால், அமைதியாக இருந்து, நேராக நின்று, கண் தொடர்பை கவனித்து மெதுவாகப் பின்வாங்குவது நல்லது. அச்சுறுத்தும்அசைவுகளை அல்லது ஒலிகளைச் செய்யாதீர்கள், பின்னால் திரும்பி ஓடுவதைத் தவிருங்கள்.
- ஒரு வாத்து உங்களைக் காயப்படுத்தும் சாத்தியமில்லாத போதிலும் அவ்வாறு நடந்தால், உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
- வாத்துகளுக்கு ஒருபோதும் உணவளிக்க வேண்டாம். மேலதிகத் தீன் கொடுப்பதால் அவற்றின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு அவற்றுக்கு மனிதர்கள் மீதுள்ள பயமும் குறைந்து விடும். அது பூங்காக்களும் விளையாட்டு மைதானங்களும் போன்ற அதிக போக்குவரத்துள்ள பகுதிகளில் அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் செய்கிறது.
- சுகங்குகளை அப்புறப்படுத்தி வைப்பது எப்படி
- ஒளி சுகங்குகளுக்கான ஆகச் சிறந்த விரட்டியாகும் . சுகங்குகள் இரவில் நடமாடுபவை, அவற்றின் கண்கள் மிகவும் ஒளி உணர்திறன் கொண்டவை. ஒரு வெளிச்சமானஒளி அல்லது ஒரு அசைவுணர் புனலொளி சுகங்குகளை அச்சுறுத்தும்.
- சுகங்குகள் உட்படப் பெரும்பாலான விலங்குகள், எலுமிச்சையினப் பழங்களின் வாசனையை விரும்புவதில்லை. ஒரு இயற்கையான சுகங்கு விரட்டியாக தோடம்பழ அல்லது எலுமிச்சம்பழத் தோல்களை முற்றத்தைச் சுற்றிப் போடுங்கள்.
- ஆமணக்கு எண்ணெய்யையும் பீங்கான் கழுவும் அழுக்ககற்றியையும்நீரில் ஐதாக்கித் தெளியுங்கள். சுகங்குகளுக்கு இந்த வாசனை வெறுப்பானதாக இருக்கும். சுகங்கு இரவில் இரை தேடிச் சென்ற பிறகு அந்த இடத்தில் தெளியுங்கள்.
- சுகங்குகள் ஒரு சிறிய தோட்டப் பகுதியில் இருந்தால், உங்கள் தோட்டத்திற்கு அருகில் வலுவான வாசனையுள்ள சவர்க்காரக் கட்டியை அல்லது அறை நாற்றமகற்றியைப் போடுங்கள். முரண்பாடாக, சுகங்குகள் வலுவான வாசனைகளைவெறுக்கின்றன.
- எலிகளும் வேறு விலங்குகளும்
எலிகளையும் வேறு தேவையற்ற விலங்குகளையும் தவிர்க்க இந்த வழிகாட்டல்களைப் பின்பற்றுங்கள்.
- எந்த உணவையும் வெளியே விடாதீர்கள், உங்கள் குப்பைகளை முன்னதாகவே வெளியில் வைக்காதீர்கள்.
- விலங்குகள் உள்ளடக்கங்களை உண்பதைத் தடுக்க உலோகக் குப்பைத் தொட்டிகளில் பாதுகாப்பாக பொருத்தப்பட்ட மூடியுடன் வெளிப்புறக் குப்பைப் பைகளை வைத்திருங்கள்.
- வீட்டைச் சுற்றித் துப்புரவாக்குங்கள் - குறைவான குப்பைகள் என்றால் மறைவதற்குக் குறைவான இடங்களே இருக்கும்.
- செல்லப்பிராணி உணவையும் பறவை விதைக் குப்பைகளையும் துப்புரவாக்குங்கள்.
- தோட்டங்களைக் குப்பைகள் இல்லாமல் வைத்திருங்கள், தேவையற்ற குப்பைகள் சேர்வதைக் குறையுங்கள்.
- உங்களிடம் கூட்டுப் பசளைக் குவியல் இருந்தால்,சேதன உணவுக் கழிவுகளைச் சேர்க்க வேண்டாம், ஏனெனில் அது எலிகளையும் விலங்குகளையும் ஈர்க்கக்கூடும்.
- வளங்கள்
- Coyote Watch Canada
Contact
101 Town Centre Boulevard
Markham, ON, L3R 9W3
Hours
8 AM to 5 PM